கவனக்குறைவாக எச்ஐவி இரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்துணவிற்காக மாதம் ரூ.7,500 வழங்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 2128

வனக்குறைவாக எச்ஐவி இரத்தம் ஏற்றப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சத்துணவிற்காக மாதம் 7,500 ரூபாய் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் தானமாகப் பெற்ற இரத்ததத்தை முறையாக பரிசோதிக்காமல் ஏற்றிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணிற்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, வீடு, அரசு நிரந்தரவேலை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு செய்துதந்துள்ளது.

அந்த பெண் சத்தான உணவு, பழங்கள் உட்கொள்ள, அரசு மாதந்தோறும் 7 ஆயிரத்து 500 ரூபாய் சத்துணவிற்காக வழங்க வேண்டும் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இன்று உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பெண் அலுவலக உதவியாளராக உள்ள நிலையில், அவரின் கல்வித் தகுதிக்கு ஏற்ப இளநிலை பணியாளர் வழங்குவது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments