அனைத்து கீழமை நீதிமன்றங்களும் ஜன.18 முதல் முழுமையாக இயங்கும் - சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களை ஜனவரி 18ம் தேதி முதல் முழுமையாக நேரடி விசாரணை முறையில் செயல்பட அனுமதிப்பது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களை ஜனவரி 18ம் தேதி முதல் முழுமையாக நேரடி விசாரணை முறையில் செயல்பட அனுமதிப்பது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் காணொலி காட்சி விசாரணையை அனுமதிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முழு அளவில் செயல்பட கீழமை நீதிமன்றங்களை அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள், தங்கள் கருத்துக்களை, டிசம்பர் 23ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Comments