கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 34 பேர் மீது வழக்கு பதியப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

0 2948
கொரோனா பரவல் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 34 பேர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஹிருத்தி ரோசன் மனைவி சுசான் கான் உள்ளிட்ட 34 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை  கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  மும்பை விமான நிலையம் அருகேவுள்ள டிராகன் பிளை பப்பில் நள்ளிரவில் போலீசார் ரெய்டு நடத்தி விதிமீறலை கண்டுபிடித்தனர். 

 அங்கிருந்த ரெய்னா,   சுசான், பாடகர் குரு ராந்தவா உள்ளிட்ட 34 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்கள் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments