மின்சார வயரில் இரும்பு ஏணி உரசியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

0 1480
சென்னை குன்றத்தூர் அருகே தனியார் நிறுவன ஷெட்டர் பராமரிப்புக்கு எடுத்து வரப்பட்ட இரும்பு ஏணி, மின்சார வயரில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியாகினர்.

சென்னை குன்றத்தூர் அருகே தனியார் நிறுவன ஷெட்டர் பராமரிப்புக்கு எடுத்து வரப்பட்ட இரும்பு ஏணி, மின்சார வயரில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியாகினர்.

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், சிப்காட்டில் பிளாஸ்டிக் மோல்டிங் செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. அங்கு ஷெட்டர் பராமரிப்பு பணிக்காக அனகாபுத்தூரை சேர்ந்த அற்புத குமார் என்பவர் முருகன், நாகராஜ், ஆனந்த் ஆகியோரை அழைத்து வந்துள்ளார்.

இன்று காலை 3 பேரும் சுமார் 20 அடி உயரம் கொண்ட இரும்பு ஏணியை வெளியே கொண்டுவந்தபோது எதிர்பாராதவிதமாக வீதியில் செல்லும் உயர் அழுத்த மின்சார வயர் மீது உரசியுள்ளது.

இதில் மின்சாரம் தாக்கி ஆனந்த தூக்கி வீசப்பட்டு லேசான காயமடைந்த நிலையில், முருகன், நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments