மின்கசிவு காரணமாக ஆயில் மில்லில் தீ விபத்து.. எண்ணெய், எந்திரங்கள் எரிந்து சேதம்

0 1104
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஆயில் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், எண்ணெய் மற்றும் எந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஆயில் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், எண்ணெய் மற்றும் எந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

சமையல் எண்ணெய்கள் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலையில் இருந்து, காலை நேரத்தில் கரும்புகை வெளியேறுவது கண்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலைக்குள் இருப்பு வைக்கப்பட்டு இருந்த எண்ணெய் வகைகளும், உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் தீப்பற்றி எரிந்துள்ளன.எண்ணெய், எந்திரங்கள் எரிந்து சேதம்

தகவலின்பேரில் விரைந்து வந்த ஈரோடு தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணெய் வகைகள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments