மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் அரசின் திட்டங்கள் எல்லா பிரிவினரையும் சென்று அடைகின்றன - பிரதமர் மோடி

0 1012

த வேறுபாடு இன்றி, அனைத்து மக்களுக்கும், அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை உறுதி செய்யும் வகையில், நாட்டின் பயணம் தொடரும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி காணொலியில் அவர் உரை நிகழ்த்தினார். எந்த சமூகமும் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு எதிர்கால வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் மோடி உறுதி அளித்தார்.

எந்த மத பாகுபாடும் இன்றி ஏழைகளுக்கான அரசின் நலவாழ்வுத் திட்டங்கள் எல்லா பிரிவினரையும் சென்று அடைவதாக மோடி கூறினார். நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் என்று வந்து விட்டால், சித்தாந்த ரீதியான வேறுபாடுகளை ஒதுக்கிவைப்பது மிகவும் முக்கியம் என்றார் மோடி. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் பல சுதந்திரப் போராட்ட வீரர்களை உருவாக்கியதை சுட்டிக்காட்டிய அவர், அவர்கள் தேச விடுதலைக்காக சித்தாந்த வேற்பாடுகளை மறந்தனர் என குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments