வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்... தலைமைச் செயலாளர், டிஜிபியுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

0 1353
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் அரசு அதிகாரிகளோடு தேர்தல் ஆணைய குழு இன்று ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் அரசு அதிகாரிகளோடு தேர்தல் ஆணைய குழு இன்று ஆலோசனை நடத்தி வருகிறது.

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமை தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று அக்குழு, அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், எஸ்பிக்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தியது.

இதையடுத்து இன்று காலை அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் அக்குழு ஆலோசித்தது. இதன்பின்னர் தற்போது தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோரோடு அக்குழு ஆலோசித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments