புதிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத ஒன்று அல்ல.. உலக சுகாதார நிறுவனம் ஆறுதல் தகவல்

0 10167
பிரிட்டனில் பரவத் துவங்கியுள்ள புதிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத ஒன்று அல்ல என்றும், தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளால் அதை கட்டுக்குள் வைக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அதன் அவசரகால சேவைகள் பிரிவு தலைவர் மைக்கேல் ரயான், இந்த புதிய வைரசை விடவும் அதிக  பாதிப்பை ஏற்படுத்திய பழைய  கொரோனா வைரஸ் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்படதாக  தெரிவித்துள்ளார்.

அதே நேரம் புதிய மரபியல் மாற்றம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் தானாக ஒழிந்து விடும் என அலட்சியமாக இருக்க கூடாது என்றும் அதை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் தேவை என்றும் அவர் எச்சரித்தார். 

புதிய கொரோனா வடிவத்தின் பரவல் கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது என பிரிட்டனின் சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments