நாளை மறுநாள் கூடுகிறது பிசிசிஐ பொதுக்குழு.. 2 புதிய அணிகள் இணைப்பது குறித்து முக்கிய அறிவிப்பு..?

பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அகமதாபாத்தில் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அகமதாபாத்தில் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், ஐபிஎல் போட்டியில் இரண்டு புதிய அணிகள் இணைப்பது குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஒரு மனதாக அதற்கான ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரண்டு புதிய அணிகளைச் சேர்ப்பது கொள்கையளவில் அங்கீகரிக்கப்பட்டவுடன், இப்போதே சேர்க்க சாத்தியமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தற்போதுள்ள 8 அணிகளே தொடரும் என்றும், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் புதிய அணிகளைச் சேர்க்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments