காட்டுப்பூச்சியின் காதலால் விபரீதம்..! முதியவர் உயிரோடு எரிப்பு

0 8656
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, சாலையோரம் படுத்திருந்த முதியவரை உயிரோடு எரித்துக் கொலை செய்ததாக, சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட போதைக் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். காட்டுப்பூச்சியின் காதலி பேசாத விரக்தியால் நிகழ்ந்த விபரீத சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, சாலையோரம் படுத்திருந்த முதியவரை உயிரோடு எரித்துக் கொலை செய்ததாக, சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட போதைக் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். காட்டுப்பூச்சியின் காதலி பேசாத விரக்தியால் நிகழ்ந்த விபரீத சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரன். 60 வயதான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் பிரச்சனை ஏற்பட்டு, வீட்டிலிருந்து வெளியேறி தனது சொந்த உழைப்பில் கிடைக்கின்ற வேலைகளைச் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், திங்கட்கிழமை அதிகாலையில் முதியவர் சந்திரனின் உடல் கருகிய நிலையில் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது சடலத்தைக் கைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்பிவைத்த போலீசார், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அதிகாலை வேளையில் அந்தவழியாகச் சென்ற 5 சிறுவர்கள் சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த சந்திரனை எழுப்பி அவரிடம் இருந்து சிகரெட் லைட்டர் வாங்கி அவரது வேட்டியில் தீவைத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. விசாரணையில், இளப்பபுரம் பகுதியில் உள்ள பழைய பிளாஸ்டிக் கடை ஒன்றில் தங்கி வேலைபார்த்து வரும் மதுரையைச் சேர்ந்த 5 சிறுவர்கள் தான் அது என்பதை கண்டறிந்தனர்.

அவர்களில் காட்டுப்பூச்சி போலக் காட்சி அளித்த பாலாஜியின் காதலி அவனுடன் செல்போனில் பேசாமல் இருந்ததால் அவன் விரக்தியாக இருந்துள்ளான். சோகத்தை போக்கலாம் என்று கூறி, அவனது நண்பர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுஅருந்த அழைத்துச் சென்றுள்ளனர். 5 பேரும் மதுபோதை தலைக்கேறிய நிலையில், நள்ளிரவில் வழி நெடுகிலும் பல்வேறு கார்கள் மீது கல்லெறிந்த வண்ணம் வந்துள்ளனர்.

இந்நிலையில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த சந்திரனை எழுப்பி, அவரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். அப்போது அவர், தன்னிடம் தீப்பெட்டி இல்லை லைட்டர் தான் உள்ளது என்று கூறி, காட்டுப்பூச்சிக் கும்பலிடம் லைட்டரை கொடுத்துள்ளார். அடுத்த நொடி லைட்டரை வாங்கிய சிறுவர்கள், இதில் தீ நன்றாகப் பிடிக்குமா? என்று கேட்டவாரே அவரது வேட்டியில் தீயைப் பற்ற வைத்துள்ளனர்.

உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், முதியவர் சந்திரன் போராட, போதைக்கும்பல் அங்கிருந்து எந்த அச்ச உணர்வும் இல்லாமல் சென்றது வெளிச்சத்திற்கு வந்தது. 15 வயது சிறுவன் மற்றும் காட்டுப்பூச்சி பாலாஜி, லட்சுமணன், பாலேஸ்வரன், இலங்கேஸ்வரன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

கொலை வழக்கில் கைதான சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே நேரத்தில் இரவு 10 மணிக்கு மேல் மதுவிற்பனை செய்து கொலை நடப்பதற்கு மூலகாரணமாக இருந்த நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

குடி... அதனை நாடிச்செல்லும் குட்டிச்சாத்தான்களையும் சிறைக்கு அனுப்பி வைக்கும் என்பதற்கு மிதமிஞ்சிய போதையால் நிகழ்ந்த இந்த கொடூரக் கொலை சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments