புதிய வகை கொரோனா.. சர்வதேச நாடுகள் உஷார்நிலை

0 3506
மீண்டும் வீறுகொண்ட கொரோனா அச்சத்தால் இந்தியா உள்பட 30 நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வீறுகொண்ட கொரோனா அச்சத்தால் இந்தியா உள்பட 30 நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31 வரை இங்கிலாந்து விமான சேவைகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதே போன்று பிரான்ஸ், ஜெர்மனி,நெதர்லாந்து ,ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல்.

பெல்ஜியம், கனடா, பெரு உள்பட 30 நாடுகளால் விமானப் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட சூழல் உருவாகியுள்ளது.

எல்லைகள் மூடப்பட்ட சூழலை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் நல்லதொரு பலன் கிடைக்கும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து சரக்குப் போக்குவரத்தை குறித்து முடிவெடுக்கவும் இறக்குமதி ஏற்றுமதி குறித்து ஆலோசிக்கவும் இங்கிலாந்து போரிஸ் ஜான்சன் இன்று அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

இதனிடையே இந்த வைரஸ் அமெரிக்காவிலும் பரவியிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் அந்நாட்டில் மேலும் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்கள் கூட்டமாககூடுவதைத் தவிர்க்கவும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் முகக்கவசங்களை தவறாமல் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments