தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - தமிழக அரசு

0 5443
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இங்கிலாந்தில் இருந்து மட்டுமின்றி அனைத்து நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.

இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்ற அவர், நோய் தொற்று இருந்தால், அரசின் கண்காணிப்பில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

இதே போன்று கர்நாடக அரசும் பெங்களூரு, மற்றும் மங்களூரு விமான நிலையம் வழியாக இங்கிலாந்தில் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் இருந்து நாடு திரும்பியவர்களின் பட்டியலை பெற்று பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments