அமெரிக்கா : காப்பீடு கவரேஜ்க்குள் வராத மருத்துவமனை, அவசர காலத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படுவதை தடை செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல்

அமெரிக்காவில் காப்பீடு கவரேஜ்க்குள் வராத மருத்துவமனை அல்லது மருத்துவரிடம் அவசர காலத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மிக அதிக கட்டணம் விதிக்கப்படுவதை தடை செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சராசரியாக 600 டாலருக்கு மேல் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், சிலருக்கு ஒரு லட்சம் டாலருக்கும் அதிகமாக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்படுதால் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எம்பிக்கள் உள்பட பலர் நீண்ட காலமாக குரல்கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றம் இதனை தடை செய்ய ஒப்புதல் தெரிவித்திருப்பது அமெரிக்கர்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
Comments