சபரிமலை திருவாபரண பெட்டி ஊர்வலத்திற்கு 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி

0 1980

பரிமலை திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த தேவசம் போர்டு தலைவர் வாசு, திருவாபரண பெட்டி ஊர்வலம் இந்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படும் என்றார்.

கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டு ஊர்வலத்தில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற அவர் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றார். ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்ட அனைவரும் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக எடுத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

திருவாபரண பெட்டிக்கு எந்த இடத்திலும் வரவேற்பு அளிக்கக்கூடாது, தீபாரா தனையும் காட்டக்கூடாது, திருவாபரண பெட்டியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments