கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் விபத்தில் 5 பேர் பலி..! 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

0 3669
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே டிராக்டர் விபத்தில் அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே டிராக்டர் விபத்தில் அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியில் இருந்து ஒரு டிராக்டரில் 25 பேர், அஞ்செட்டி அருகே உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு வந்துள்ளனர். மஞ்சுகொண்டபள்ளி என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் விபத்தில் சிக்கியது.

கரடுமுரடான சாலையில் வளைவு திரும்பும் இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கவிழ்ந்ததில அதில் பயணித்தவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

20 பேர் காயமடைந்ததில் 10 பேர் அஞ்செட்டி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் அருகில் உள்ள பெங்களூரு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments