அரைகுறை ஆடையுடன் போஸ்‘: சபல ஐ.டி ஊழியரிடத்தில் ரூ. 16 லட்சம் பறிப்பு! டேட்டிங் செயலியில் பழகிய பெண்கள் கைவரிசை

0 3992

பெங்களூருவில் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி ஐ.டி ஊழியரிடத்தில் ரூ.16 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவவத்தில் இரு பெண்கள் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் 25 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கு டேட்டிங் செயலி மூலம் ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னை சுவேதா என்று அந்த இளம்பெண் அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் செல்போனில் பேசி பழகி வந்தனர்.

இந்த நிலையில் , ஐ.டி ஊழியரிடத்தில்‘ 2 ரூபாய் ஆயிரத்தை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்தால், இளம்பெண்கள் நிர்வாணமாக வீடியோ கால் பேசுவார்கள் என்றும் தனது தோழி நிகிதா என்பவர் கூட இந்த மாதிரி பேசுவார் என்றும் சுவேதா கூறியுள்ளார். இதையடுத்து, இளைஞருக்குள் சபலம் உருவானது. ' உனது தோழி நிகிதாவை என்னிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேச சொல் ' என்று கூறியுள்ளார். இதையடுத்து. நிகிதாவின் போன்-பே நம்பரை கொடுத்த சுவேதா, இந்த நம்பருக்கு ரூ.2 ஆயிரம் அனுப்பினால் அவர் நிர்வாணமாக வீடியோ கால் பேசுவார் என்று கூறியுள்ளார். அதன்பேரில், போன்-பே மூலம் அந்த இளைஞர் 2 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.

சற்று நேரத்தில் இளைஞரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தன்னை நிகிதா என்று அறிமுகம் செய்தார். பின்னர், வாட்ஸ்- அப்பில் வீடியோ கால் செய்யும்படி என்ஜினீயரிடம் கூறினார். அந்த இளைஞரும் வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் செய்தார். அப்போது வாட்ஸ்-அப்பில் பேசிய இளம்பெண் கேட்டதால் , அந்த இளைஞர் தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்றதாக தெரிகிறது. இதனை, வாட்ஸ் -அப்பில் பேசிய பெண் ஸ்கீரின் சாட் எடுத்து வைத்து கொண்டார்.

பின்னர் , அந்த இளைஞரை தொடர்பு கொண்டு பேசிய நிகிதாவும், சுவேதாவும், உனது நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த இளைஞர் பல தவணைகளில் 16 லட்ச ரூபாய் வரை கொடுத்துள்ளார். ஆனாலும் , தொடர்ந்து அந்த இளைஞரிடத்தில் பணம் கேட்டு நிகிதாவும், சுவேதாவும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தைரியத்தை வரழைத்துக் கொண்ட அந்த இளைஞர் தன்னை மிரட்டும் பெண்கள் குறித்து ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீசில், புகாரளித்தார். அதன்பேரில் , போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரிடத்தில் பணம் பறித்த இளம் பெண்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments