’வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று எங்கள் நாட்டிலும் ஏற்பட்டுள்ளது’ -ஆஸ்திரேலியா

பிரிட்டனில் அடையாளங்காணப்பட்டுள்ள வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று தங்களது நாட்டிலும் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் அடையாளங்காணப்பட்டுள்ள வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று தங்களது நாட்டிலும் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு வந்த இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதே நேரம் சிட்னியில் அண்மையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் வீரியமிக்க புதிய கொரோனா தொற்று பரவுவதை அடுத்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அந்த நாட்டுடனான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் முதல் நாடாக ஹாங்காங் பயணத் தடையை விதித்துள்ளது.
Comments