காதலை முறித்ததால், காதலியை பட்டப்பகலில் சாலை நடுவே சரமாரியாக வெட்டிய காதலன்

0 52298
கர்நாடகாவில் கருத்து வேறுபாடு காரணமாக காதலை முறித்துக் கொண்ட பெண்ணை சாலை நடுவே காதலன் அரிவாளால் வெட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் கருத்து வேறுபாடு காரணமாக காதலை முறித்துக் கொண்ட பெண்ணை சாலை நடுவே காதலன் அரிவாளால் வெட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹூப்ளியைச் சேர்ந்த இஸ்மாயிலும் ஆஷாவும் இரண்டாண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன் ஆஷா காதலை முறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த இஸ்மாயில் காலை சாலையில் தனியாக நடந்து வந்த ஆஷாவை அரிவாள் கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளான்.

ஆஷா ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருக்க, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இஸ்மாயிலின் நண்பன் ஒருவன், அவனை சாவகாசமாக சமாதானம் செய்து அழைத்துச் செல்கிறான்.

இஸ்மாயில் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆஷா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments