நெல் விளைச்சலுக்காகத் தமிழக அரசால் குடியரசு நாளில் வழங்கப்படும் விருது, விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்படும் - முதலமைச்சர்

0 1204

திக நெல் விளைச்சல் திறனுக்கான விருது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய நீர்ப்பாசனத்துக்கு மின்சாரம் வழங்கும் நேரத்தை 4 மணி நேரமாகக் குறைத்தபோது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தி 16 மணி நேரம் மின்சாரத்தைப் பெற்றுத் தந்தவர் நாராயணசாமி நாயுடு எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மின்கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் மின் கட்டணம் குறைக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். அதிக நெல் விளைச்சலுக்காகக் குடியரசு நாளில் வழங்கப்படும் விருது இந்த ஆண்டு முதல், நாராயண சாமி நாயுடு பெயரில் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments