ஈரோட்டில் முதியவரை கீழே தள்ளி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்யும் சிசிடிவி காட்சி
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே முதியவரை கீழே தள்ளி மிரட்டி 2 பேர் பணத்தை வழிப்பறி செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
எழுதிங்கப்பட்டி குட்டபாளையத்தை சேர்ந்த 70 வயது முதியவரான சுப்பிரமணி, மடத்துபாளையத்திலுள்ள மகன் வீட்டுக்கு வந்த அவர், நேற்று அருகிலுள்ள பூட்டப்பட்ட கடைக்கு வெளியே அமர்ந்திருந்தார்.
அப்போது வந்த ஒருவன், பணம் கேட்டு மிரட்டியுள்ளான். இதை கண்டுகொள்ளாமல் சென்றபோது, சட்டையை பிடித்து இழுத்து தள்ளியுள்ளான். அவனுடன் இன்னொருவனும் சேர்ந்து கொண்டு, 22 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளான்.
இந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றி, 2 பேரை போலீசார் தேடுகின்றனர்.
Comments