“அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பார்” - அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன்

0 7287

விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது உறுதி என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் கூறினார்.

விருதுநகர் அதிமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் பலர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிருப்தி நிர்வாகிகளின் கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவுடன் ரகசிய கூட்டு வைத்துக்கொண்டு அதிமுகவுக்கு துரோகம் செய்கிறார் என்றும் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவர் தோற்பது நிச்சயம் என்றும் கூறினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதற்கான ஆடியோக்களும் தன்னிடம் இருப்பதாகவும் எம்.எல்.ஏ ராஜவர்மன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments