அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் சாதிவாரி விவரங்களைக் கோரிய பாமக நிறுவனர் ராமதாசின் மனு தள்ளுபடி

0 1322
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் சாதிவாரி, வகுப்புவாரி விவரங்களை வழங்க உத்தரவிடக் கோரிய பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் சாதிவாரி, வகுப்புவாரி விவரங்களை வழங்க உத்தரவிடக் கோரிய பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

1989ஆம் ஆண்டு முதல் இதுவரை பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்களைச் சாதி வாரியாக கோரிய மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவரங்களை வெளியிடுவதால் சமூக நல்லிணக்கம் பாதிக்கும் எனக் கூற எந்த அடிப்படையும் இல்லை என ராமதாஸ் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், எந்தச் சமூகமும் கல்வி பெற எந்தத் தடையும் இல்லை எனவும், மனுதாரர் நல்ல தரமான பள்ளிகளைத் தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்த விவரங்களைப் பெற்ற பின் போராட்டங்கள் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் உள்ளதா என வினவினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments