தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை... ஜன.19-ல் நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன்

0 3796

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, ஜனவரி மாதம் 19ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை 586 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 775 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு சமூகவிரோதிகள் தான் காரணம் என குற்றம் சாட்டிய நடிகர் ரஜினிகாந்திடம் வரும் ஜனவரி மாதம் 19 ம்தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரியில் சம்மன் அனுப்பப்பட்டு, படப்பிடிப்பை காரணம் காட்டி ரஜினிகாந்த் ஆஜராகாத நிலையில், வரும் 19ஆம் தேதி தூத்துக்குடியில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments