மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்துக்கு மேல் தொகுதிகளைக் கைப்பற்றினால் தான் டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன் - பிரசாந்த் கிசோர்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்துக்கு மேல் தொகுதிகளைக் கைப்பற்றினால் தான் டுவிட்டரில் இருந்து வெளியேறுவதாகப் பிரசாந்த் கிசோர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறத் திரிணாமூல் காங்கிரசுக்கு பிரசாந்த் கிசோர் வியூகம் வகுத்துக் கொடுத்து வருகிறார். திரிணாமூல் கட்சியில் இருந்து பலர் பாஜகவில் சேர்ந்த நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இரட்டை இலக்க எண்ணிக்கையை பாஜக தாண்டாது என்றும், அப்படித் தாண்டிவிட்டால் தான் டுவிட்டரில் இருந்து வெளியேறி விடுவதாகவும் பிரசாந்த் கிசோர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 2016 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் வென்ற பாஜக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது.
Comments