ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊழல் தடுப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊழல் தடுப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊழல் தடுப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான அஷ்வினி குமார் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம், வரி ஏய்ப்பு உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளையும் இந்த நீதிமன்றங்களில் விசாரித்து ஓராண்டிற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றங்களை அமைக்க மாநில ஐகோர்ட்டுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments