விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததால் பாலியல் மிரட்டல்கள் வருகின்றன - கங்கனா ரணாவத்

0 3086

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததால் தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்கள் வருவதாக நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்த  கங்கனா ரணாவத், தற்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அண்மையில் இவர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தையும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தனக்கு  கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வருவதாக அவர்  குற்றம் சாட்டி உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments