கொரோனா தாக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதால் தனது முதலீட்டுத் திட்டங்கள் தொடர்வதாக சவூதி அரேபியா அறிவிப்பு

0 4736
கொரோனா தாக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதால் தனது முதலீட்டுத் திட்டங்கள் தொடர்வதாக சவூதி அரேபியா அறிவிப்பு

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதாகவும், அதன் பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் செல்வதால், இந்தியாவில் தனது முதலீட்டுத் திட்டங்கள் தொடர்வதாகவும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

பெட்ரோகெமிக்கல்ஸ், எண்ணெய் சுத்திகரிப்பு, உள்கட்டமைப்பு, சுரங்கம், உற்பத்தி, வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவில் சுமார் 7 லட்சத்து 40 ஆயிரம் கோடியை முதலீடு செய்வதாக சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.

இது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், அறிவியல் பகிர்வு, தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு கூட்டுறவு உள்ளிட்டவற்றிலும் இருதரப்பு உறவு வலுவடைந்து வருவதாக இந்தியாவுக்கான சவூதி தூதர் சவூத் பின் முகம்மத் அல் சாதி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments