ஆக்ராவில் நடுசாலையில் ரியல் எஸ்டேட் தரகர் சுட்டுக் கொலை... பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்

0 1519

ஆக்ராவில் பட்டப்பகலில் நடுசாலையில் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹரீஷ் பச்சோரி என்ற அவர், சாலையில் ஒருபக்கத்தில் இருந்து மறுபக்கம் செல்ல நேற்று மதியம் 1 மணியளவில் காத்து கொண்டிருந்தார். செல்போனில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து அவர் எதிரே நின்றனர்.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் திடீரென கைத் துப்பாக்கியை எடுத்து வயிற்றில் சுடவே, ஹரிஷ் தடுமாறியபடியே அவனை பிடிக்க முயன்றார். இதில் துப்பாக்கியால் சுட்டவனும் கீழே விழுந்து எழுந்து, பின்னர் 2 முறை சுட்டான். பின்னர் கூட்டாளியோடு பைக்கில் தப்பினான்.

பலத்த காயமடைந்த ஹரிஷ் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இக்கொலையில் குடும்பத்தினருக்கு தொடர்பிருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments