நாமக்கல் மாவட்டத்தில் ஆற்று நீர் தொடர்பாக இரு ஊர்களின் விவசாயிகளிடையே தகராறு : நீரின் அளவை ஆய்வு செய்து பங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் - கோட்டாட்சியர்

0 769
நாமக்கல் மாவட்டத்தில் ஆற்று நீர் தொடர்பாக இரு ஊர்களின் விவசாயிகளிடையே தகராறு : நீரின் அளவை ஆய்வு செய்து பங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் - கோட்டாட்சியர்

நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி அருகே ஆற்று நீர் தொடர்பாக இரு ஊர்களின் விவசாயிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் நீரின் அளவை ஆய்வு செய்து பங்கிட உள்ளதாகக் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

கொல்லிமலையில் உருவாகும் வாச்சுகல் ஆறு முள்ளுக்குறிச்சி, தும்பல்பட்டி வழியாகப் பாய்ந்து சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் சுவேத நதியில் கலக்கிறது.

இந்த ஆற்றில் ஊனந்தாங்கல் தடுப்பணையின் கீழ் ஒரு பிரிவு விவசாயிகள் தடுப்புச் சுவர் எழுப்பித் தண்ணீரைத் திருப்பி விட்டதை அறிந்த மற்றொரு பிரிவு விவசாயிகள் இடித்து அகற்றினர்.

இந்த ஆண்டும் நீர்ப் பங்கீடு தொடர்பாக இரு ஊர்களின் விவசாயிகளிடமும் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பணைக்குக் கீழே உள்ள பகுதிகளுக்கு அதிக அளவுத் தண்ணீரும், கிளை வாய்க்காலுக்குக் குறைந்த அளவுத் தண்ணீர் செல்வதற்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தெரிவித்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் கோட்டாட்சியர் கோட்டை குமார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments