பொங்கல் பரிசு ரூ.2500 - அரசாணை வெளியீடு

0 4512
அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் எனும் முதலமைச்சரின் அறிவிப்பு அரசாணை வெளியீடு

தைத்திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் முழுக்கரும்புடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு, 5ஆயிரத்து604 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்த உத்தரவுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கலை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கடந்த ஆண்டுவரை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் துண்டு கரும்புக்கு பதிலாக முழுக்கரும்பும், பொங்கல் பரிசுத் தொகை 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தியும் வழங்கப்படும் என முதலமைச்சர் நேற்றுமுன்தினம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்,  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கும் ரொக்கமாக தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவி, பொங்கல் பரிசுத் தொகுப்பு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, தோராயமாக 5 அடி நீளமுள்ள முழுக்கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய துணிப்பை பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரேசன் கடைகள் மூலமாக ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும்.

அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் விண்ணப்பிக்கப்பட்ட 3 லட்சத்து 75 ஆயிரத்து 235 சர்க்கரை குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும். இதற்கான மொத்த செலவு தொகை, 5ஆயிரத்து 604 கோடியே 84 லட்சம் ரூபாயினை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளருக்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை துவக்கி வைக்கிறார். திட்டம் துவங்குவதன் அடையாளமாக, பயனாளிகளுக்கு தலைமைச் செயலகத்தில் வைத்து ரூ.2500 பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments