இப்படியும் சம்பவம்: மூன்று முறை ஆண் நண்பருடன் தலைமறைவு ... மனைவியை பணம் கொடுத்து மீட்ட கணவர்!

0 58979
கஞ்சா வியாபாரி கோட்டை குமார்

கோவையில் திருமணமான பெண் ஒருவர் தனது ஆண் நண்பரோடு சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடி கணவரிடம் பணம் பறித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி கோட்டை குமார். இவன் ஜேசிபி ஆபரேட்டர் என்ற பெயரில் கோவை பாப்பம்பட்டியில் பிரபு என்பவரது வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தான். அப்போது, பிரபுவின் மனைவி பத்மஸ்ரீக்கும் கோட்டை குமாருக்கும் இடையே  தகாத உறவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சேர்ந்தே வெளியூர் சென்று தங்கி வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த 15 ம் தேதி பிரபு வெளியே சென்றிருந்த நிலையில், அவரது தாயார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, முகமூடி அணிந்தவர்களுடன் வீட்டுக்கு வந்த கோட்டை குமார், பிரபுவின் தாயாரை மிரட்டி பத்ம ஸ்ரீயைக் கடத்திச் சென்றுள்ளான்.

பிறகு, பிரபுவுக்கு போன் போட்டு, “ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் உன் மனைவியை விட்டுவிடுகிறேன். இல்லை என்றால் மும்பையிலோ, பெங்களூரிலோ பணத்துக்கு விற்றுவிடுவேன்” என்று கோட்டை குமார் மிரட்டி இருக்கிறான். இதனால், நொந்துபோன பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

பிரபு சற்று வசதியான பின்னணி கொண்டவர். அதே வேளையில் மனைவி மீது அதீத அன்பு கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. அதனைத் தனக்கு சாதகமாக்க நினைத்த கோட்டை குமார், பத்மஸ்ரீயுடன் அவ்வப்போது தலைமறைவாகி, ஊர் சுற்றுவதும் பின்பு பிரபுவை மிரட்டி பணம் பெற்றுக் கொண்டு ஒப்படைப்பதுமான இருந்துள்ளார். இதுவரை  மூன்று முறை பத்மஸ்ரீயை கடத்தி பிரபுவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு  கோட்டை குமார் விடுவித்துள்ளான். கடத்தல் நாடகத்துக்கு பத்மஸ்ரீயும் உடந்தையாக இருந்துள்ளார் .

மனைவி மீதுள்ள அன்பாலும், வெளியே தெரிந்தால் தன்னுடைய கௌரவம் கெட்டுப்போய் விடுமோ என்ற பயத்தாலும், போலீசில் புகாரளிக்காமல் சத்தமின்றி 3 முறையும் பணத்தைக் கொடுத்து பிரபு தனது மனைவியை மீட்டு வந்துள்ளார். இந்த நிலையில் , பத்மஸ்ரீயுடன் கோட்டைகுமார் தலைமறைவாகியுள்ளான். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பிரபு இந்த முறை சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து,   தலைமறைவாகியுள்ள  காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர். கோட்டை குமார் அடிப்படையில் ஒரு கஞ்சா வியாபாரி என்பதும் அவன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

தற்போது , தலைமறைவாகியுள்ள கோட்டைகுமார், பத்மஸ்ரீயை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments