கலோன் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற 2 இந்திய வீராங்கனைகள்

0 1836

ஜெர்மனியில் நடைபெற்ற கலோன் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனைகள் சிம்ரஞ்சித் கவுர், மணீஷா ஆகிய இருவரும் தங்கம் வென்றுள்ளனர்.

57 கிலோ எடைப் பிரிவில், மணீஷா இந்தியாவை சேர்ந்த சாக்சியை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

60 கிலோ எடைப் பிரிவில் சிம்ரஞ்சித் கவுர், ஜெர்மனியின் மாயா கிளெய்ன்ஹான்சை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

ஏற்கெனவே, 52 கிலோ எடைப் பிரிவில் அமித் பங்கல் தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 3 தங்கங்கள், 2 வெள்ளிகள், 4 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments