கொரோனா தடுப்பூசியை போடுமாறு அரசு மக்களை கட்டாயப்படுத்தாது - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கொரோனா தடுப்பூசி போட விருப்பம் இல்லாதவர்களிடம், போட்டே தீர வேண்டும் என அரசு வற்புறுத்தாது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட விருப்பம் இல்லாதவர்களிடம், போட்டே தீர வேண்டும் என அரசு வற்புறுத்தாது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர்,அடுத்த மாதம் தடுப்பூசி தயாராகி விடும் என்பதால், தடுப்பூசி போடும் திட்டத்திற்காக பெருமளவில் பணியாளர்கள் தயார்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகேஅதற்கு அனுமதி வழங்கப்படும் என்ற அவர் ஜனவரி மாதத்தின் எந்த வாரத்திலும் தடுப்பூசி போடும் பணி துவங்கும் என்றார்.
Comments