திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்ற தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் கைது

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்ற தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் கைது
திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்றதாக, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 10பேர் கைது செய்யப்பட்டனர்.
கபிலதீர்த்தத்தில் உள்ள அதிரடிப்படையினரும், வனத்துறையினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அலிபிரி சாலையில் உள்ள அறிவியல் மையத்திற்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் அருகே சென்ற 10 பேரையும், சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மரம் வெட்டுவதற்கு பயன்படுத்தும் கோடாரி, ரம்பம், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் செம்மரம் வெட்டச் சென்றதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments