இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்
இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் முன்னுரிமை கொடுப்பதே அரசின் முதல் பணியாக இருக்கும் என்றும் இதில் ஒருபோதும் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த மாதத்தில் எந்த வாரத்திலும் தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அவசர கால பயன்பாட்டுக்கு என்று விண்ணப்பித்தவர்களின் தடுப்பூசி குறித்த விவரங்கள் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷவர்தன் கூறினார்.
Comments