இன்னும் 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் - மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

இன்னும் 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் - மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
இன்னும் ஆறு மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மும்பை, புனே, தானே உள்ளிட்ட நகரங்களில் கொரோனா வேகமாகப் பரவி வந்த நிலையில் படிப்படியாகக் குறைந்ததால் மகாராஷ்ட்ரா அரசு தளர்வுகளை அறிவித்தது.
இந்நிலையில், இன்னும் ஆறு மாதத்திற்கு பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து நடமாடும் படி உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார்.
மீண்டும் ஊரடங்கை தாம் அமல்படுத்த விரும்பவில்லை என்றும் மக்கள் விழிப்புடன் இருந்து ஒத்துழைக்கும்படியும் மகாராஷ்ட்ர முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments