உள்கட்டமைப்பு திட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0 413

உள்கட்டமைப்பு திட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டுமென மாநிலங்களுக்கு  மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அனைத்து உயர்நீதிமன்றங்களின் பதிவாளர்களுக்கு மத்திய சட்ட அமைச்சக செயலாளர் எழுதி உள்ள கடிதத்தில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிவில் நீதிமன்றங்களை இதற்கென ஒதுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த நீதிமன்றங்களில் இத்தகைய வழக்குகளை விசாரிக்க வாரத்தில் சிறப்பு நாட்களை நிர்ணயிக்கலாம் என்றும் அதன் மூலம் வழக்குகளில் தேவையற்ற தாமதத்தை தவிர்க்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும் என்று கூறிய அவர் எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த மாநிலங்கள், நாடுகள் தரவரிசையில் முதலிடத்தை பெற முடியும்” என்றும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments