இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை.. பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அ.தி.மு.க., தொடங்கியுள்ள நிலையில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அ.தி.மு.க., தொடங்கியுள்ள நிலையில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்றனர்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும், முதலமைச்சரின் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments