மெரினா கடற்கரை அருகே பிரேக் பிடிக்காத மாநகர பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து

சென்னை மெரினா கடற்கரை அருகே பிரேக் பிடிக்காத மாநகர பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து
சென்னை மெரினா கடற்கரை அருகே பிரேக் பிடிக்காத மாநகர பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
அண்ணா சதுக்கத்தில் இருந்து கே.கே. நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் சரிவர பிரேக் பிடிக்காததால் சாலையின் நடுவே பழுதாகி நின்றது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஓட்டுநர் பேருந்தை உட்புற சாலையில் நிறுத்திவிடலாம் என எண்ணி பேருந்தை இயக்கிய நிலையில், முழுவதுமாக பிரேக் செயலிழந்து 3 இருசக்கர வாகனங்களின் மீது மோதியவாறு தடுப்புச்சுவரில் மோதி நின்றது.
Comments