கோவிட் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தபின்னர் தடுப்பூசி தேவையா? - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்

0 2194

கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கும் தடுப்பூசி அவசியமா என்ற கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான வழிகாட்டல்களில் கொரோனா பாதிப்புடையவர்கள் குணம் அடைந்து 14 நாட்களுக்குப் பிறகு தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் குணம் அடைந்தவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால் அவர்கள் அவசரமாக தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்றும் குணம் அடைந்து பல மாதங்களாகி விட்டவர்கள் தடுப்பூசி போட வாய்ப்பிருந்தால் போட்டுக் கொள்ளலாம் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments