தமிழ்நாட்டில் இன்று 1,114 பேருக்கு கொரோனா உறுதி.. 15 பேர் பலி

0 2652
தமிழ்நாட்டில், புதிதாக 1,114 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில்,  புதிதாக 1,114 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் 1,198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 15 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா உயிரிழப்பு இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 30 ஆக பதிவாகி உள்ளது. சென்னையில்  325  பேருக்கு, புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3-  வது நாளாக கொரோனாவுக்கு ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. 8 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி இருந்தது.

தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 593 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments