பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் பரவலால் அதிர்வலை

பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ், கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ், கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதையை சூழலில் துரிதமாக செயல்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியுள்ளதாக அத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்தை நிறுத்த ஜெர்மனி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments