தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் வாங்க நிதி அமைச்சகம் அனுமதி

0 1770
எளிதாக தொழில் துவங்குவது தொடர்பான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளதால், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக 16,728 கோடி ரூபாயை கடன் வாங்கிக் கொள்ளலாம் என நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

எளிதாக தொழில் துவங்குவது தொடர்பான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளதால், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக 16,728 கோடி ரூபாயை கடன் வாங்கிக் கொள்ளலாம் என நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தொழில்துவங்குவதற்கான சீர்திருத்த செயல் திட்டங்களை இந்த மாநிலங்கள் நிறைவேற்றி உள்ளன.

அத்துடன் மத்திய அரசு குறிப்பிட்டபடி சில சட்டங்களின் அடிப்படையில், தொழில்துவங்க தேவைப்படும் பதிவு, பதிவை புதுப்பித்தல், இதர சான்றிதழ்கள், உரிமங்கள் போன்றவற்றை ரத்து செய்து நடைமுறைகளை தமிழகம் உள்ளிட்ட இந்த 5 மாநிலங்கள் எளிதாக்கி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments