வேளாண் சட்டம் குறித்து திட்டமிட்டு பயத்தை எதிர்கட்சிகள் ஏற்படுத்துகின்றன-மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் குற்றச்சாட்டு

0 1057
வேளாண் சட்டம் குறித்து விவசாயிகளிடையே காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பயத்தை ஏற்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

வேளாண் சட்டம் குறித்து விவசாயிகளிடையே காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பயத்தை ஏற்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டம் குறித்து விவசாயிகளை சந்தித்து விளக்க தஞ்சாவூர் வந்த வி.கே.சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், புதிய வேளாண் சட்டத்தால் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய ஒப்பந்த சட்டமானது, 30 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது என்று கூறிய அவர், அந்த சட்டத்தாலும் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments