குடியாத்தம் அருகே 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய காவனூர் ஏரி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 3 ஆண்டுகளுக்கு பிறகு 400 ஏக்கர் பரப்பளவு ஏரி நிரம்பியதை, மேள தாளம் முழங்க பட்டாசுகளை வெடித்தும், 2 கிடாக்களை வெட்டியும் திருவிழா போல கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

காவனூர் ஏரி எனப்படும் அந்த ஏரி மூலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20 கிராம மக்கள் பயனடைகின்றனர். அண்மையில் நிவர் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் நீர் இருப்பு அதிகரித்த நிலையில், முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேறி வருகிறது.
இதையடுத்து உபரி நீர் மீது கே.வி குப்பம் தொகுதி எம்எல்ஏ லோகநாதன் மற்றும் அப்பகுதி விவசாயிகள், ஊர்மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
Comments