நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது...

நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலியின் பரிந்துரையை ஏற்று அதிபர் பித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.
ஏப்ரல்-மே மாத வாக்கில் நாடாளுமன்றத்திற்கு இடைக்கால தேர்தல் நடத்துவதற்கான தேதிகளையும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 30 தேதியும், மே மாதம் 10 ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.
முன்னதாக தமது அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாக கூட்டிய பிரதமர் சர்மா ஒலி நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவுக்கு ஒப்புதல் பெற்றார். ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரசண்டா மற்றும் சர்மா ஒலி அணிகளுக்கு இடையே மோதல் போக்கு உள்ளது.
இதை அடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து புதிதாக தேர்தலை சந்திக்கும் முடிவை சர்மா ஒலி எடுத்துள்ளார். கலைக்கப்பட்ட நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையில் 275 உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு கடந்த 2017 ல் தேர்தல் நடந்தது.
Comments