இந்தியப் பெருங்கடலில் தனித்துவமான புவியியல் சாதகங்களை இந்தியா கொண்டுள்ளது - சீனாவின் குளோபல் டைம்ஸ் கட்டுரையில் வெளியீடு

இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் தனித்துவமான புவியியல் சாதகங்களை இந்தியா கொண்டுள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான குளோபல் டைம்சில் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் பலநாடுகளின் ஒத்துழைப்பு வழிமுறைகளைத் திட்டமிடுவதில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்திலும், இந்திய தலைமையிலான முன்முயற்சிகளிலும் பல நாடுகள் சேர்வதால் இந்தியா நன்மைகளைப் பெற முடிவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை முதல் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை வரையுள்ள பகுதிகளுக்கு இந்தியா பாலமாக விளங்குவதாகவும் குளோபல் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோ பசிபிக் கூட்டமைப்பு நாளைக்கு வரப்போவதை பற்றிய முன்கணிப்பு அல்ல, நிகழ்கால உண்மை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதையும் அக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.
Comments