மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சாலையோர கலைஞர் பிரிடேட்டர் உடையணிந்து இலவசமாக முகக்கவசம் வழங்கி சேவை

0 1101
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சாலையோர கலைஞர் பிரிடேட்டர் உடையணிந்து இலவசமாக முகக்கவசம் வழங்கி சேவை

ஹாலிவுட் பட கற்பனை கதாபாத்திரமான பிரடேட்டர் (Predator) போல உடையணிந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சாலையோர கலைஞர் (Street performer) ஒருவர் மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி சேவை செய்து வருகிறார்.

முகமது நார் ஹிசாம் என்ற அந்த நபர், கார் ஓட்டுநராக பணியாற்றிய நிலையில் 2016ல் வலது கண் பார்வை பறிபோனதால் வேலையை விடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தற்போது அவர், 6 கிலோ எடை கொண்ட பிரடேட்டர் உடையை தினமும் 2 முதல் 3 மணி நேரம் அணிந்து, முகக்கவசம் அணியாமல் நடமாடுவோரை மறித்து நன்கொடை நிதியின்மூலமும், தனது சொந்த செலவிலும் வாங்கிய முகக்கவசம் அளித்து சேவை செய்கிறார்.

அதேபோல் வீடு இல்லாத ஏழைகளுக்கும் உணவு அளித்து வருகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments