நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் சர்மா ஒலி ஜனாதிபதிக்கு பரிந்துரை

நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் சர்மா ஒலி ஜனாதிபதிக்கு பரிந்துரை
நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் கே.பி.சர்மா ஒலி பரிந்துரைத்துள்ளார்.
நேபாளத்தில் ஆளுங்கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் உள்கட்சி மோதல் வலுத்துள்ளதுடன் பிரதமர் சர்ம ஒலிக்கு கடும் எதிர்ப்பும் உருவாகி உள்ளது.
புஷ்ப குமார் தஹால், மாதவ் நேபாள் ஆகியோர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று கட்சியில் உள்ள தமது ஆதரவு தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் சர்மா ஒலி ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை கேபினட்டின் அவசர கூட்டத்தை நடத்தினார்.
அதில் நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவுக்கு ஒப்புதல் பெற்ற அவர், அந்த தீர்மானத்தை ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு அனுப்பி வைக்க உள்ளார். அது ஏற்கப்பட்டால், நேபாளத்தில் விரைவில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடக்கும்.
Comments