மும்பை - அகமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு ஓடவுள்ள புல்லட் ரயில் படங்கள் வெளியீடு

மும்பை - அகமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு ஓடவுள்ள புல்லட் ரயில் படங்கள் வெளியீடு
மும்பை - அகமதாபாத் இடையே ஓடவுள்ள புல்லட் ரயில் படங்களை இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ளது.
மும்பை - அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புல்லட் ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேசிய அதிவிரைவு ரயில் கழகம் இந்தப் பணிகளை ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. 2023ஆம் ஆண்டில் திட்டப் பணிகள் முழுவதும் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் பாதையில் ஓடவுள்ள சின்கான்சென் வகை புல்லட் ரயில்களின் படங்களை ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டத்துக்குத் தொழில்நுட்ப உதவியும் நிதியுதவியும் ஜப்பான் வழங்க உள்ளது குறிப்பிடத் தக்கது.
Comments